புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களை புலம்பெயர் மக்கள் நேசித்தால் இலங்கைக்கு வந்து அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். எனினும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என குறிப்பிட்டதுடன் விமானப்படையினர் முல்லைத்தீவு வான் பரப்பில் விமானங்களைச் செலுத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது.
ஆனால் சிலர் இதனை பிழையாகக் கருதுகின்றனர்.முல்லைத்தீவு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு வான் பரப்பிலும் பறந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பாதுகாப்புப் படையினரின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment