முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண் என்று ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுத் தலைவர் அஸ்டா ஆக். ஜொஹன்னஸ்டாட்டிர் பாராட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை வைரவிழா வரும் 30ம் தேதி ஆளுநர் ரோசைய்யா தலைமையில் பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். முன்னதாக சட்டசபை வைரவிழா புகைப்பட கண்காட்சியை தலைமைச் செயலகத்தில் முதல் ஜெயலலிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் வரும் 28ம் தேதி வரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழு தலைவர் அஸ்டா ஆர்.ஜெஹன்னஸ்டாட்டிர் தலைமையிலான 4 பேர் அடங்கிய குழு இந்த புகைப்பட கண்காட்சியைப் பார்க்க நேற்று முன்தினம் சென்னை வந்தது. தலைமைச் செயலகத்தில் அக்குழுவினர் சபாநாயகர் பி. தனபாலை சந்தித்து பேசினர். அப்போது தனபால் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கினார். அவர் கூறியதை கவனமாக கேட்ட அவர்கள் அதன் பிறகு புகைப்பட கண்காட்சியை கண்டு களித்தனர். பின்னர் அஸ்டா கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் இரும்பு பெண் என்றார்.
No comments:
Post a Comment