Translate

Wednesday, 28 November 2012

மாவீரர் தின துண்டுப் பிரசுரங்களுடன் ஜவர் அக்கரைப்பற்றில் கைது!

Posted Imageஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாவீரர் தினத்திற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற ஐந்து பேரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், மாவீரர் துண்டுப் பிரசுரங்களை முச்சக்கரவண்டியில் எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர்களை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று இராமகிருஷ்ண பாடசாலை வீதியில் வைத்து இவர்கள் கைது செய்துள்ளதுடன், முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.   
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment