Translate

Wednesday 28 November 2012

யாழ்.பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்


இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதிகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நீதியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
"இந்நாட்டில் சட்டம் என்பது ஒரு பாரதூரமான நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித் துறையின் சுயாதீனத் தன்மையானது பாதாளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
 
நான் உரையாற்றிக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் யாழ். பல்கலைக்கழக வளாகம் ஒரு பதற்ற நிலையில் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அடித்து உதைத்து அட்டூழியம் புரியப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிலைமை நாட்டுக்கு நல்லதாகப் படவில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment