
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் மீண்டும் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த கூட்டத்துக்கு முன்பாக இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக ்ழத் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுகளுக்கு பின்னர் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் அமெரிக்கா தீவிரம் காட்டும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அமெரிக்காவின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் உறுதிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டும் அமெரிக்காவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அந்நாட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment