இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை தமிழகத்திற்கு கிடையாது என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் தமது சுயலாபம் கருதி இலங்கை விடயத்தில் தலையீடு செய்து வருகின்றனர். இது அவர்கள் தேர்தல்களில் வாக்குகளை குவிக்கும் நோக்மே.
இருப்பினும் இலங்கைத் தமிழர்கள் ஐக்கிய நாட்டுக்குள் வாழ விரும்புகின்றனர் ஆனாலும் தமிழக அரசியல் வாதிகள் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைப்பது நகைப்பிற்குரியதாகும்.
அரசியல் வாதிகளின் இந்த சூழ்ச்சித் திட்டங்களை அறியாத அப்பாவி பொதுமக்கள் இந்த அரசியல்வாதிகளின் கருத்துக்களை உண்மை என நம்புகின்றனர். அத்துடன் பொதுமக்களை பயன்படுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் திட்டமானது துரதிஸ்டவசமானது.
எந்தவொரு வெளிச்சக்தியும் எமது நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது. தமிழக அகதி முகாம்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசியல் வாதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முடியுமா என அவர் கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை வழங்க தமிழக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment