தமிழ் மக்களின் ஆன்மாவின் வடுவாக, சிங்கள இனவெறியின் அதிகோர முகத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக, அமைந்த யூலைப் படுகொலைகள் தமிழர்கள் வாழ்வில் கறுப்பு நாளாகப் பதிந்து போனது.
இன்றும் கறுப்பு வாரத்தில் படுகொலைகள் தொடர்கின்றது. தமிழ் அரசியல் கைதியான கணேசன் நிமலரூபன் கடந்த 2ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயத்துக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
சிங்கள பேரினவாத அரசின் படுகொலையால் பலியான நிமலரூபனை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், பாடசாலை நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் இளையோராகிய நாம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கின்றோம்.
இது போன்ற அரச பயங்கரவாதக் கொலைகள் உடன் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். நிமலரூபன் படுகொலையையும் அதற்குக் காரணமாக இருக்கும் அரச பயங்கரவாத நடவடிக்கையையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் விசாரணைகள் இன்றி , கொடும் சிறைகளில் தடுத்து வைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி அவர்களின் விடுதலையை விரைவாக்கி, தமிழர் மீதான இனப்படுகொலை செய்து வரும் சிங்களப் பேரினவாத அரசை விசாரணைக்கு உட்படுத்தி தமிழர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர முன்வர வேண்டும்.
இதற்காக அனைத்துத் தமிழ் இளையோரும் ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என இத்தருணத்தில் உறுதியெடுத்துக்கொள்வோமாக.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழ் இளையோர் நடுவம் நோர்வே
No comments:
Post a Comment