Translate

Tuesday, 3 July 2012

வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி


வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி

வடக்கில் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வடக்கு சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தைஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார். வெலிஓயா முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ்காணப்பட்டதாகவும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெலிஓயா பிரதேசம் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெலிஓயா பகுதி உண்மையில் தமிழில் மணலாறு என முன்னர் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் 9000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் மீளவும் வெலிஓயா பகுதி முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்துடன் வெலிஓயா இணைக்கப்பட்டதுடன் மாவட்டத்தின் சனத்தொகைப் பரம்பலில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் மக்களின் புலப்பெயர்வு ஆகியவற்றினாலும் சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment