லண்டனில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கை விமானநிலையத்தில் தடுத்துவைப்பு !
நேற்றைய தினம் லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 40 பேர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று கட்டநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களை, குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்குள் வர அனுமதித்த பின்னர், சிறப்பு குற்றப் புலணாய்வுப் பிரிவினர் இவர்களை விசாரித்து வருவதாகவும், அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு விமானநிலையத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.............. read more
No comments:
Post a Comment