Translate

Friday, 30 September 2011

காங்கிரஸூக்கு ஓட்டளிக்க வேண்டாம்: ராம்தேவ்

காங்கிரஸூக்கு ஓட்டளிக்க வேண்டாம்: ராம்தேவ்


ஹர்தோய், செப்.30: ஊழல் வளர்ந்ததற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். எனவே அக்கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்று யோக குரு ராம்தேவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.



உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோயில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: நாட்டில் ஊழல் வளர்ந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பாகும். எனவே மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸýக்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே வறுமை வளர்ந்ததற்கு காரணம் என்று ராம்தேவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment