தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தமிழ் மக்கள் மனோ கணேசன் கட்சியை ஆதரியுங்கள்
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த கொழும்பு வாழ் தமிழ் மக்கள் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்துவரும் இன அழிப்பு விவகாரம் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள சூழலில் தமிழ்த்தேசிய அரசியலை உலக ரீதியாக வலுப்படுத்த வேண்டிய கடைமைப்பாடு தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது. புலம் பெயர் தமிழ் மக்கள், தமிழ்நாட்டு தமிழ் மக்கள் உட்பட உலகில் வாழும் சகல தமிழ் மக்களும் இப் பணியில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர்............... read more
No comments:
Post a Comment