தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறவழிப்போராட்டத்தை தமிழர் நடுவம் வாழ்த்தி வரவேற்கின்றது.
முள்ளிவாய்க்காலில் மௌனித்தது போர் ஆயுதங்களேயன்றி விடுதலை முழக்கமல்ல.!
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழீழ மக்கள் போர்க்காலத்தை விட மிக மோசமான உளவியல் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். எல்லா அவலங்களையும், எல்லா துன்பதுயரங்களையும், அவமானங்களையும், அட்டூழியங்களையும் மௌனமாய் ஏற்றே ஆகவேண்டிய மக்களாக, கையறுநிலையில் எம் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லா உரிமைகளையும் இழந்து நிம்மதியையும் இழந்த மக்களாக எம் மக்கள் தவிக்கின்றனர்.
வீட்டுக்குள் நுளையும் காமுகனைத், திருடனை, விரட்டிச் சென்று பிடிக்கக்கூட உரிமையில்லாத மக்களாகவே தமிழ்மக்கள், சிங்கள பேரினவாத ஆட்சியின் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குவதாக நம்பப்படும் கிறீஸ்மனிதர்கள் என்று சொல்லப்படும் நபர்கள் மீது, தாக்குதல் நடத்துவோர் சுடப்படுவீர்கள் என்று, சிறீலங்காப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கிறது.
இதுதான் தற்போது, எமது மக்களின் நிலை.
தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. சிங்கள ஆக்கிரமிப்பு வேகமாக இடம்பெறுகின்றது. தமிழர்களின் நிர்வாகப் பிரிவுகளை சிங்கள நிர்வாகப் பிரிவுகளாக்கும் முனைப்புகள் தொடர்கின்றன.
தமிழர்களை விரட்டி அவர்களின் காணிகளை கையகப்படுத்தி, அந்நிலங்களில், தமிழ் மக்களை வெற்றிகொண்ட இராணுவத் திமிர்த்தனத்தை காட்சிக்கு வைக்கிறது சிங்களம்.
ஆயுதப் போரின் முடிவு, தமிழ்மக்களின் விடுதலைப் போரின் முடிவு என்று சிங்களம் இறுதி முடிவுக்கு வந்துள்ளது.
இதன் வெளிப்பாடே, சிங்கள அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளாகும்.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின்னர், தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில், சிங்கள அரசு மேற்கொண்டுவரும் தமிழர் விரோதச் செயற்பாடுகளை கண்டிக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் 17ம் திகதி திங்கட்கிழமை, உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. இதனை பிரான்ஸ் தமிழர் நடுவம் மகிழ்வோடு வரவேற்கின்றது.
எமது மக்களின் பிரச்சினைகளை, வெளிக்கொணர்வதற்கும், சர்வதேச கவனத்தை இவற்றின்பால் திருப்புவதற்கும் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சனநாயக வழியிலான இந்தப் போராட்டம் வெற்றி பெற பிரான்ஸ் தமிழர் நடுவம் வாழ்த்துகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைத் தாகம், வீரியம் குறையாமல், அப்படியே உள்ளங்களில் கொதிநிலையில் இருக்கிறது.
தாயகத்திலும், புலத்திலும் தொடர்ச்சியான போராட்டத்திற்கான சூழலைநோக்கி தமிழர்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.
விடுதலைக்கான எம்மக்களின் போராட்ட நகர்வில், புதியதொரு, துளிர்ப்பாக இந்தப் போராட்டம் அமையட்டும். அது மென்மேலும், பரந்து விரிந்த, தாயக மக்களைப் பற்றிப் படரட்டும்.
எமது விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈகம்செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவுகளோடு, அநியாயமாக கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களின் நினைவுகளோடு நாம் எமது பயணத்தைத் தெராடர்வோம்.
தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற கொள்கையின்பேரில், தாயக மக்களின் வாக்குகளைப் பெற்று, மக்களின் பிரதிநிதியாகியுள்ள அனைவருக்கும், அந்தத் தேசிய இலட்சியத்தை அடையும் போராட்டத்தை ஒற்றுமையுடன் உறுதிதளராமல் கொண்டு செல்லவேண்டிய மாபெரும் பொறுப்பு இருக்கின்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்

No comments:
Post a Comment