Translate

Friday, 21 October 2011

புலிகள் இருந்திருந்தால் பாரதவின் கொலைப்பழியும் அவர்கள் மீதே விழுந்திருக்கும் : வினோநோகராதலிங்கம்


விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால் பாரத லக்ஷ்மனின் கொலைப் பழியை புலிகளின் தலையில் சுமத்திவிட்டு குற்றவாளிகள் இலகுவாகத் தப்பித்திருப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான எமது சந்திப்புக்களின் போது வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது தென் பகுதியிலும் சட்டவிரோத ஆயுதங்களைக் களையுமாறு வலியுறுத்தி வந்தோம். ஆனாலும், அது நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது தென் பகுதியிலும் இருக்கின்ற ஆயுதக் குழுக்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியுடனான சந்திப்புக்களின் போதும் பேச்சுக்களின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி வந்துள்ளது. எனினும், எதுவும் நடைபெறவில்லை. இதன் விளைவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்ந்திரவின் உயிர்ப்பலியாகும்.
விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால் பாரத லக்ஷ்மனின் கொலைப் பழியை அவர்கள் மீது இலகுவாக சுமத்திவிட்டு குற்றவாளிகள் தப்பித்திருப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment