ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவீரர்நாள் நிகழ்வுகள் அமையட்டும்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
முழு மக்களையும் அரவணைக்கும் நோக்கமாக கொண்ட பொதுக் கட்டமைப்பின் கீழ் மாவீரர்நாள் வணக்க நிகழ்வினை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த வருடம் போல் இந்த வருடமும் விடுதலை அமைப்பின் பெயரில் இரு அறிக்கைகளாக மாவீரர்நாள் கொள்கை விளக்க அறிக்கை வெளிவராது, ஒரே அறிக்கையாகவெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இத்தகைய நோக்கம் கொண்ட முன்னெடுப்புகளுக்கு தனது முழுமையான ஆதரவைவழங்கத் தயாராகவுள்ளது தெரிவித்துள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகுறித்து நா.த.அரசாங்கத்தின் மாவீரர் குடும்ப நலன்பேணும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயேஇதனை வலியுறுத்தியுள்ளது.
ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீர்நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்ற மக்களினதும், மாவீரர் குடும்பங்களினதும் கரிசனையை கவனத்தில் கொண்டு சம்பந்தபட்டதரப்புகள் உடனடியாக உரையாடல்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த முரண்பாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழஅரசாங்கத்தையும் இழுத்துப் மேற்கொள்ளப்படும் விசமப்பரப்புரைகளையும் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நா.த.அரசாங்கத்தின் துணைப்பிரதமரும்,மாவீரர் குடும்ப நலன்பேணும் அமைச்சருமாகிய உருத்திரபாதி சேகர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம் :
ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் கீழ்
மாவீரர்நாள் நிகழ்வுகள் அமையட்டும்!
உலகவரலாறு பூராவும் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் கதாநாயகார்களாக, ஆதர்சபுருசர்களாக மதிக்கப்பட்டு போற்றப்படும் பண்பாடு நிரம்பிக்கிடக்கின்றது. இத்தகையதொருபாரம்பரியமும், பெருமைமிக்கதுமான உன்னத விடுதலைப் பண்பாட்டை தமிழர்களின் சமகால வரலாற்றிலும் தமிழீழ தேசிய தலைவர்; அவர்கள் மாவீரர்களை போற்றி வணங்குதல் ஊடாகஉருவாக்கி வைத்துள்ளார்.
இரு தசாப்தங்களைத் தாண்டி மாபெரும் பண்பாட்டு - அரசியல் குறியீடுகளுடன் இயங்கி வரும் மாவீரர்நாளும், மாவீரர்களைப் போற்றும் பிற நிகழ்வுகளும் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவீழ்ந்தவர்களை பூக்களாலும், கண்ணீராலும், உணர்வாலும் நினைவுகொள்ளும்; நிகழ்வுகளாக அமைந்து வந்தமை மட்டுமல்ல, அது இன்னமும் ஆழமாகச் சென்று தமிழினத்தின்விடுதலைக்கான அரசியல், இராஐதந்திர கொள்கைப்பிரகடனங்களை முன்வைத்து உறுதி கொள்ளும் உயிர்ப்பின் நாளாக அமைந்து வந்தது. இன்றைய காலத்தின் தேவை கருதி அதுதொடர்ந்தும் அப்படியே அமைய வேண்டும்.
இன்று தமிழீழத் தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தும், சிதைத்தும் அநாகரீகமான பாசிச முகத்தினை சிங்கள அரசு வெளிக்காட்டி வருகின்றது. தாயகத்தில் மக்கள் தமதுமனக்கோவில்களில் மாவீரர்களை வைத்து வழிபட வேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளனர். குவிக்கப்பட்ட இராணுவமும், சிங்கள அரச இயந்திரங்களும், மாவீரர்களைப் போற்றும்பண்பாடு என்பது சிங்கள ஆட்சிக்கு எதிரான மாபெரும் குறியீடு என்ற அச்சத்தில் துப்பாக்கி முனையில் மாவீரத்தின் அனைத்து அடையாளங்களையும் அழிக்க முயல்கின்றது.
இந்தகைய காலச்சூழலில், உலகத்தமிழினமே மாவீரர் பண்பாட்டினை உணர்வும், உயிர்ப்பும் நிரம்பிய நிகழ்வாக காவிச்செல்ல வேண்டிய பொறுப்பினைக் கொண்டவர்களாவர். குறிப்பாகப்புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் இந்த பண்பாட்டு, அரசியல் பணியில் உச்சபட்ச விழிப்பினையும் எழுச்சியினையும் வெளிப்படுத்தல் வேண்டும்.
இத்தகைய பொறுப்புமிக்கதொரு சமகாலவெளியில், புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மனி ஆகிய இடங்களில் மாவீரர்நாளினை முன்னெடுப்பது தொடர்பானவிவாதங்கள் மிகத்தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்த முரண்நிலை புலம்பெயர் தமிழ் சமூகத்தால் கசப்புடனும், வேதனையுடனும் பார்க்கப்படுகின்றது.
இம் முரண்பாட்டின் பின்னணியானது விடுதலை அமைப்பின் இரு கட்டமைப்புக்கள் ஒருமித்துச் செயற்படமுடியாமல் போன அவலநிலையில் இருந்துதான் எழுகிறது என்றே நாம்கருதுகின்றோம். தாம் மட்டுமே இயங்க வேண்டும் என ஒரு தரப்பு நினைப்பதும் செயற்படுவதும் ஒருமித்த செயற்பாடுகளுக்குரிய அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. இம்முரண்பாடுகள் கடந்த மாவீரர்நாளின் போது இரு வேறுபட்ட மாவீரர்நாள் அறிக்கைகளாக வெளிப்பட்டன. இவ் வருடம் இரண்டு பிரிவுகளாக மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறும்அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இம் முரண்பாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் இழுத்துப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதனையும் நாம்அவதானித்துள்ளோம். இத்தகைய விசமப்பரப்புரைகளை நாம் கண்டனம் செய்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பொறுத்தவரை மாவீரர்நாள் ஏற்பாடுகள் ஒருமித்த வகையில் நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். முரண்பாட்டின் பின்னணியில்இருக்கும் இரு தரப்புகளும் விடுதலை அமைப்பின் கட்டமைப்புகளாக இருக்கும் காரணத்தால் இவர்கள் தமக்கிடையே பேசி ஒருமித்த ஏற்பாட்டுக்கு வருவதனைத் தவிர வேறு எந்தமார்க்கமும் இந்த ஒருமித்த ஏற்பாட்டுக்கு வழிகோலாது. விடுதலைப் பண்பாட்டுக்கு, மரபுக்கும் மாறான அவதூறுப்பரப்புரைகள் நிறுத்தப்பட்டு ஒருமித்தவகையில் மாவீரர்நாள் ஏற்பாடுகள்மேற்கொள்வது தொடர்பான உரையாடல்கள் உடடினயாக மீள ஆரம்பிக்கப்படவேண்டும்.
இத்தகைய உரையாடல்களின் ஊடாக வெளிப்படையான - முழு மக்களையும் அரவணைக்கும் நோக்கம் கொண்ட பொதுக் கட்டமைப்பின் கீழ் அனைவரும் இணைந்து மாவீரர்நாள்நிகழ்வினை நடாத்த சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வரல் வேண்டும்.
கடந்த வருடம் போல் இந்த வருடமும் விடுதலை அமைப்பின் பெயரில் இரு அறிக்கைகளாக மாவீரர்நாள் அறிக்கை வெளிவராது, ஒரே அறிக்கையாக வெளிவரவேண்டும் என்பதே எமதுவிருப்பம்.
இவையே மாவீரர்களை வணக்கம் செய்வதற்கான தகுதியை நமக்குத்தரும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்ப நலன்பேணும் அமைச்சு இத்தகைய நோக்கம் கொண்ட முன்னெடுப்புகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளது.
ஒருமித்த ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீர்நாள் நிகழவுகள் நடைபெறவேண்டும் என்பதே மக்களினதும், மாவீரர் குடும்பங்களினதும் கரிசனையாக உள்ளது. முக்களை இயங்குசக்திகளாக கொண்டு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில், மக்களின் கருத்துக்களை உள் வாங்காமல், அவற்றினை புறந்தள்ளும் உதாசீனச் செயற்பாடுகள் அவர்களின் அழிவுக்கேவழிசமைக்கும். உரியவர்கள் இதனை நன்கு கவனத்திற் கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என நாம் உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம்.
இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் துணைப்பிரதமரும்,மாவீரர் குடும்ப நலன்பேணும் அமைச்சருமாகிய உருத்திரபாதி சேகர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment