பிரித்தானியாவில் இசையில் சாதித்த ஈழத் தமிழன்!
யாழ்ப்பாணம் அளவெட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் என்ற ஈழத் தமிழர் இசைத் துறையில் சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் இவர் மேல்நாட்டு கலைத்துறையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பாடலை உலகத் தரத்துக்கு ஏற்ப சிறப்பாக உருவாக்கியுள்ளார். பிரித்தானியாவில் இசை Top Chart நோக்கிய இவர் பயணம் கண்டு வெவ்வேறு Music record labels இவரை அணுகி உள்ளார்கள்.
ஆனால் எமக்கென்ற தனி அங்கீகாரம் வேண்டுமென பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து SME என்ற தனி record label ஐ உருவாக்கித் தனது தனித்துவம் கொண்ட இசையை மேல்நாட்டவர் முன்னிலையில் நிலைநாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment