இலங்கைக்கு அதிக அந்நிய செலாவாணியை ஈட்டிக் கொடுக்கும் துறைகளின் ஊழியர்கள் வரிசையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் பணிப் பெண்கள் ஈட்டித்தரும் அந்நிய செலாவாணி ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் நிர்க்கதியாகினர். நிர்க்கதியாகும். பெண்கள் அவர்களது வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். அதன் பின்னர் பாதுகாப்புத் தேடி தூதரகங்களுக்கு வரும் பெண்களின் கதையோ எரிகாயங்களுடன் அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டது.

தூதரகங்களுக்கு வரும் பணிப்பெண்கள் அங்குள்ள பணியாளர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். சவுதிஅரேபியா, பஹரேன், குவைட் போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.இந்த மானங்கெட்ட செயலுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதிஅரேபியா தூதரகத்தில் 300 இலங்கைப் பணிப்பெண்களும் குவைட் தூதரகத்தில் 400 பணிப்பெண்களும் சரணடைந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த பெண்கள் இலங்கை வந்து அதனை அம்பலப்படுத்தியுள்ளனர். தூதரகங்களில் உள்ள பணியாளர்கள் இவ்வாறு செயற்படும்போது தூதுவர் மரண தூக்கத்தில் இருந்துள்ளார்.
இவ்வாறான இலங்கைப் பணிப்பெண்களைத் தூதரக பணியாளர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதும் அவர்கள் தண்டிக்கப்படுவது கேள்விக்குறியே..?