ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது திவயின பத்திரிகை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் 20ஆம் அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றன. நான்கு அமைப்புக்கள் இவ்வாறு வெளிநாட்டுத் தூதுவர்களிடம் இலங்கை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
வடக்கில் தமிழர்கள் கடத்தப்படுவதாகவும், காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றுவதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் போலியான காணொளி ஒன்றையும் குறித்த அமைப்புக்கள் தயாரித்துள்ளன.
கனடாவிலிருந்து கெரி, ஆனந்தசங்கரி உள்ளிட்ட எட்டு பேரைக் கொண்ட புலி ஆதரவு அமைப்பொன்று ஜெனீவாவில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இலங்கை பற்றி முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு அமைச்சர்களை சந்தித்து இலங்கை தொடர்பில் விளக்கம அளிக்க குறித்த புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment