Translate

Sunday, 24 June 2012

பொய்த் தகவல்களை கூறி மன்மோகன் சிங்கை ஏமாற்றிய ராஜபக்ச

பிரேசிலில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்றியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மன்மோகன், ராஜபக்ச சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்ற தகவலை இந்திய அயலுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இலங்கையில் தமிழர் புனர்வாழ்வு, மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டது. முகாம்களில் இருந்த 3 லட்சம் தமிழர்களில் தற்போது 3000 பேர் மட்டுமே இருப்பதாக ராஜபக்ச பிரதமரிடம் கூறியதாக மத்தாய் தெரிவித்தார்.

மேலும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றியும் ராஜபக்ச பேசியதாக அவர் தெரிவித்தார்.

மீள் குடியமர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் வடக்குப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ராஜபக்ச கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மீள்குடியமர்வு பற்றி ராஜபக்ச கொடுத்த புள்ளிவிவரங்கள் முழுப்பொய் என்று தற்போது உறுதியாகியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்னும் 6,022 பேர்கள் மட்டுமே மீள் குடியமர்வு செய்யவேண்டியுள்ளது என்று இலங்கை அரசு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

ஆனால் இலங்கை பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ராணுவ அதிகாரி ருவான் வணிகசூரிய இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் 6034 பேர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மன்மோகன் சிங்கிடம் இதை பாதியாகக் குறைத்து பொய் கூறியுள்ளார் ராஜபக்ச என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் அதிகாரப்பகிர்வு பற்றி எதுவும் கூறாமல் மீள்குடியமர்வு, மின்சாரம் என்று எதையோ பேசி ராஜபக்ச மன்மோகனை திசைதிருப்பிவிட்டதாகவும் இலங்கை பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment