2009ம் ஆண்டு மே மாதம் இறுதிவரை, முள்ளிவாய்க்காலில் நின்று, காயப்பட்ட பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் பிரித்தானியா வருகைதந்திருந்தார். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு ஒழுங்குசெய்த கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, வன்னியின் தற்போதைய நிலைகுறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தினார். பிரித்தானியாவில் வசிக்கும் பல மருத்துவர்களும், அமைப்புகளின் சில பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்கள் எதிர்நோக்கும் மருத்துவ பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. புலம்பெயர் அமைப்புகள், வன்னியில் உள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாம், மற்றும் ஊனமுற்ற தமிழர்களின் இன்றைய தேவைகள் என்ன என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

No comments:
Post a Comment