பிரித்தானியாவின் நிதியுதவிகள் வடக்கிலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை மீளொருங்கமைக்கப் பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளையிலும், வவுனியாவில் பூந்தோட்டத்திலும், கிழக்கில் வெலிக்கந்தவிலும் அமைந்துள்ள சிறப்பு முகாம்களில் ஏராளமான முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் தடுத்து வைத்துள்ள நிலையில் அப்போராளிகளை மீளொருங்கிணைக்க தனது நிதி பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளமை யாழ்ப்பாணத்தில் கருத்துவேறுபாட்டைத் தோற்றுவித்துள்ளது. மேற்படி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளைப் பார்ப்பதற்கு அவர்களின் பெற்றோர்களுக்குக் கூட அனுமதி இல்லாத நிலையில், போர்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இச்செயற்பாட்டை பிரித்தானியா ஆதரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது............ read more
No comments:
Post a Comment