Translate

Sunday, 19 June 2011

அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும் தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கே பஞ்சமில்லை


அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும்தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கேபஞ்சமில்லை
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கின்றது. எது நடக்கவிருக்கின்றதோஅதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை நாங்கள் இப்போது நம்பத்தலைப்பட்டிருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் இதுதான் என்றும்மாற்றமில்லாத உண்மையும் கூட..!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த காட்டுமிராண்டித்தனம்எமக்கு இந்த யதார்த்தத்தை மீள ஒரு முறை உணர்த்தியிருக்கின்றது.

தமிழர்கள் ஆயதம் ஏந்தியது தவறு என்றார்கள் அது தவறாகவேயிருக்கலாம். ஆனால்எதற்காக ஏந்தினார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடினால் காலத்தில் மறைக்கப்பட்டபல உண்மைகள் வெளிவரும் என்பதே இன்றும் தமிழ்த் தேசியவாதிகளின்வாதமாகவிருக்கின்றது. அதுதான் நியாயமானது நிஜமானது.
தமிழர்கள் என்றைக்கு தமது உரிமைகளுக்காக போராடத் தலைப்பட்டார்களோ அன்றுதொட்டு இன்று வரைக்கும் போராட்ட வடிவங்கள் பல தடவை மாற்றம் கண்டன.போராட்டம் மட்டும் நிலையாக இப்போதும் இருக்கின்றது.
இதற்குக் காரணம் தமிழர்கள் போரியல் மனோபாவத்துடன் இருந்தபோதெல்லாம்சிங்களம் தமிழர்களுக்கு முன்னாலும் சர்வதேசத்தின் முன்னாலும் தன்னையொருஅப்பாவிபோல் காட்டிக்கொண்டது தான்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் முப்பது வருடங்கள் ஈழத்தமிழர் ஜனநாயகரீதியாக போராடியபோது தனது அரக்கக் கரங்களின் துணையுடனும் இந்தியமேலாதிக்க துரோகிகளின் ஆதரவுடனும் அந்தப் போராட்டத்தை கசக்கிப் பிய்த்தெறிந்தகதையை யாரும் மறக்கமுடியாது.
தமது உரிமைக்காக தமிழர்கள் கிளர்ந்தெழுந்தபோதெல்லாம் சிங்களத் தலைமைகள்தமது காடைத்தனத்தை காட்டினார்கள். இதற்கு சாட்சியாக தமிழாராட்சி மாநாட்டில்கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவிடம் இன்றைக்கும் இருக்கின்றது.
இதுபோக பல அழிக்கப்பட்டு விட்டன. பலவற்றுக்கு நிலைவாலயங்கள்அமைக்கப்படவில்லை. இந்த நிலைமையின் தொடர்ச்சியில்தான் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதரீதியாக மாற்றம் கண்டது.
அது நடந்து வந்த கடந்த முப்பது வருடங்களில் சிங்களம் நடந்து கொண்டவிதம்சர்வதேசத்தின் முன்னால் போட்டுக் கொண்ட நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனையாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
காலத்திற்க்குக் காலம் சமாதான உடன்படிக்கைகள் என்றவொன்றைபோட்டுக்கொண்டு தமிழர்களின் போரியல் மனோபாவத்தை சிதைக்க முற்பட்டது.ஆனால் அவற்றின் மூலம் தமிழர்கள் தமது எதிர்பார்ப்பை கேட்டபோது அவை சிங்களத்தலைமைகளால் கிழித்தெறியப்பட்டது.
அல்லது அப்பாவிப் பொதுமக்கள் மீது இடைவிடாத கண்மூடித்தனமான தாக்குதலைத்தொடுத்து தமிழர்களிடமுள்ள போரின்பால் அல்லது போரிடும் மனோபாவத்தில்சிதைப்பை ஏற்படுத்த சிங்களம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது. இந்தவிடயத்தையும் தோண்டிப் பார்த்தால் முள்ளிவாய்க்காலைப்போல் இன்னும் பலஇனப்படுகொலைகள் பற்றிய உண்மைக்கதைகள் வெளிக்கொணரப்படும்.
ஆக தமிழர்கள் எப்போதெல்லாம் கிளர்ந்தெழுந்த தமது உரிமைகளுக்காக போராடஎத்தனித்தார்களோ அப்போதெல்லாம் தன்னையொரு அப்பாவிபோலக்காட்டிக்கொண்ட சிங்களம் அதை எத்தகைய கொடுரங்களைச் செய்தும்அடக்கிவிடவேண்டும் என்று நினைத்தது. இதுதான் சர்வதேசத்தின் மத்தியில் சிங்களம்கடந்த காலத்தில் பெற்றுக்கொண்டிருந்த நல்ல பிள்ளை என்ற பெயருக்குக் காரணமாகஇருக்கலாம்.
எனவே நாமிங்கு கூறத்தலைப்படுவது என்னவென்றால் சிங்களம் ஒருபோதும்தமிழர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவது கிடையாது. தமிழீழவிடுதலைப் புலிகள் போராட்டத்தில் சமபலம் பெற்றிருந்தபோது அதனை எப்படியாவதுதீர்த்துக் கட்டவேண்டும் என்று நினைத்து தனக்கு ஆதரவான தமிழ் அடிவருடிகளோடுசர்வதேசத்திடம் பிச்சை ஏற்கத் தீர்மானித்தது.
இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பிச்சைப்பாத்திரத்தை தெரிவு செய்யவும்சர்வதேசத்திற்கு விடுதலைப்புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல எனவும்இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் விடுதலைப்புலிகள் தடையாகவுள்ளனர் என்பதைக்காட்டவுமே தமிழ் அடிவருடிகளை சிங்களத்தலைமை சாமர்த்தியமாக தன்னோடுஇணைத்துக் கொண்டது. ஈற்றில் இந்த முயற்சியில் சிங்களம் வெற்றிபெற்றும்கொண்டது.
ஆனால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக கூறி இரண்டாண்டுகள் கடக்கின்றது.விடுலைப்புலிகளுக்கானது என்ற போரில் தமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்தும்எண்ணத்தையே கைவிடவேண்டும் என்னுமளவில் சுதந்திரமான வாழ்வை நேசித்தஇலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இரண்டாண்டுகள்கடக்கின்றது.
இருந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பதை மட்டும் சிங்களம் இன்றும் பேச வில்லை.
இதிலிருந்து இங்கிருந்து நாம் தீர்மானித்துக் கொண்டாகவேண்டும் தமிழர்கள் தமதுசுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய தீர்வொன்றினை சிங்களம் ஒருபோதும் தரமாட்டாது என்பதை. தமிழர்கள் நலிந்து தங்களுடைய ஏவல் செய்து வாழ்ந்தால் அதனைசிங்களம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும். ஏப்போதாவது எங்கேயாவது போராடத்தலைப்பட்டால் அது பயங்கரவாதம் என்ற போர்வையில் அழித்தொழிக்க முனையும்.
இதுதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த சம்பவத்தின்பின்னாலுள்ள கதை. யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் தோற்றுப்போனதொரு சமுகம்என்ற தோற்றுவாயை விதைக்க சிங்களத்தலைமை முற்பட்டது. ஆனால் அதுஎடுபடாத சூழலில் ஜனநாயக ரீதியாக வடக்குக் கிழக்கில் மீண்டும் தமதுஉரிமைப்போரைத் தொடர தமிழர்கள் தயார் என்ற சமிக்ஞையை அண்மைக்காலத்தேர்தல்கள் மூலம் சிங்களதேசம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment