தூக்கில் தொங்கி என் உயிரை விடுவேன்: சீமான்
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில்,
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும்.
தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும். நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.
No comments:
Post a Comment