தமிழ் அகதிகளுக்காகவும் குரல் கொடுக்கிறது சனல்- 4 தொலைக்காட்சி.
பிரிட்டனின் அகதிக்கொள்கை மற்றும் மனித உரிமை கொள்கைகளுக்கு இடையே முரண்பாடு காணப்படுவதாக சனல் 4 கூறியுள்ளது. தமிழர்களை திருப்பி அனுப்புவது ஆபத்தானது எனவும் அது மேலும் கூறியுள்ளது. சிறிலங்காவில் ஈழத்தமிழர்கள் நாள்தோறும் சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள், மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் பிரிட்டன் தமிழ் அகதிகளை சிறிலங்காவிற்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிரிட்டனின் அகதிக்கொள்கையும், மனித உரிமை தொடர்பான கொள்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் லிவர்பூலில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். சித்திரவதைகளில் இருந்து விடுபடுபவர்களுக்கான தொண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அந்த அமைப்பு அகதிகளைத் திருப்பி அனுப்புவது ஆபத்தானது என கூறியுள்ளது. இதனை மேற்கோள் காட்டி சனல் 4 தொலைக்காட்சி தனது செய்தி நேரத்தில் இத் தகவல்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=777
No comments:
Post a Comment