Translate

Sunday, 2 October 2011

3 பேர் உயிரை காப்பாற்ற உண்ணாவிரதம்: பழ.நெடுமாறன்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,



3 தமிழர்கள் உயிர்கள் காக்கப்பட வேண்டும். மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. 



சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் முடித்து வைக்கிறார்.

3 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment