மீண்டும் நடிக்க வருகிறார் வைகை புயல் வடிவேலு
தமிழ் சினிமாவின் காமெடி உலகில் உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகர் வைகைபுயல் வடிவேலு.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவினால், சினிமாவிலிருந்தே ஓரங்கட்டப் பட்டாரா அல்லது ஒதுங்கி இருந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
ஒரு நாளைக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டுமெனில் 5 லட்சம் சம்பளம் வாங்கிய வடிவேலு, இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
இந்நிலையில் அவரை மீண்டும் நடிக்க அழைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. இவர் புதிதாக இயக்கப் போகும் காமெடி சப்ஜெக்ட் கதைக்கு வைகைப்புயலை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு வடிவேலுவும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
மீண்டும் அரசியல் என்று கேட்டால், ‘ஏன் இதுவரைக்கும் பட்டது போதாதா… ஆள விடுங்கப்பு’ என்று அவரது சினிமா டயலாக்கையே பதிலாகத் தருகிறார்.
No comments:
Post a Comment