லண்டனில் நடைபெற்ற இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு,
2ஆம்.லெப்ரினன் மாலதி, லெப்ரினன் கேணல் விக்டர், லெப்ரினன் கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.
நேற்று சனிக்கிழமை (15 / 10 / 2011 ) கிழக்கு லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள PLASHET GROVE, EASTHAM,LONDON,E6, 1DG எனும் முகவரியில் அமைந்துள்ள PLASHET SCHOOL மண்டபத்திலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பொதுச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து 2ஆம்.லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை மாவீரரின் சகோதரனான திரு.ரமேஸ் அவர்களும், பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட்ட 6 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் விக்டர் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை மாவீரரின் சகோதரரான திரு.தயா அவர்களும், லெப்ரினன். கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன் உட்பட்ட 12 மாவீரர்களுக்குமான மலர்மாலையினை 3 மாவீரர்களின் சகோதரனான திரு. சேகர் அவர்களும், வீரமங்கை செங்கொடியின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை தாய்த்தமிழக உறவு திரு. சக்திவேல் அவர்களும் அணிவித்தனர்.
மலர்மாலை அணிவிப்பைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது. மாலை 6:30 மணியளவில் ஆரம்பமான இந்த நினைவுவணக்க நிகழ்வு இரவு 8:30 மணிவரை இடம்பெற்றது.
இந்த நினைவுவணக்க நிகழ்வில் கவிதைகள், மற்ரும் மாவீரர்கள் நினைவு சுமந்த நினைவுரைகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment