!!!!!!!இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவர முயற்சித்த தீர்மானங்களைப் பாரிய சவால்களுக்கு மத்தியில் தோல்வியடையச் செய்தோம். இருப்பினும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகள் அச்சுறுத்தலானதும் ஆபத்தானதுமாகவே அமையும் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,
கனடா மிக தீவிரமாக இலங்கைக்கு எதிராக செயற்பட்டது. அதேபோன்று ஐ.நா. தலைமையகமும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தலைமைத்துவமும் இணைந்து இலங்கையை சிறைப்படுத்த முயற்சித்தது. ஆனால், இந்தியா உட்பட பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கே ஆதரவளித்திருந்தன. .
நாட்டின் நற்பெயரையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நாங்கள் ஜெனீவாவில் குழுவாக தடுமாற்றங்கள் இன்றி செயற்பட்டோம். இதனால், இலங்கைக்கு எதிரான இரண்டு சவால்களில் வெற்றி கொண்டோம்.
அரசியல், சமூகம் மற்றும் அபிவிருத்திகளைக் கேள்விக்குறியாக்கும் வகையில் கனடா உள்ளிட்ட பல நாடுகள் செயற்பட்டன. உண்மையில் கடந்த மூன்று வாரகாலமும் பெரும் சவால்களையே எதிர்கொண்டோம்.
யுத்தத்தின் போது இலங்கை செயற்பட்ட விதம் குறித்தும் அதற்கு பின்னர் நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் அனைத்து தரப்புகளுக்கும் தெளிவுபடுத்தினோம்.
ஜெனீவா மனித உரிமை அமர்வுகளில் பங்கு கொள்ளவந்திருந்த 29 நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கினோம்.
பாகிஸ்தான், கியூபா, நைஜீரியா, மலேசியா, பங்களதேஷ், பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் குரல் கொடுத்தன.
இனி மார்ச் மாத சவால்களை எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஐ.நா. அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளை ஏற்படுத்துவதே சர்வதேச நாடுகளின் உள்நோக்கமாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை. இலங்கையை முட்டாளாக்க நினைப்பது அந்நாடுகளின் முட்டாள் தனம்" என்றார்!!!!!!!!!!!!!!!

No comments:
Post a Comment