Translate

Tuesday, 8 November 2011

திருக்குறள் நூல் வழங்கும் விழா

குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெறும் “திருக்குறள் நூல் வழங்கும் விழா” வரும் 10-11-2011, வியாழன் பிற்பகல் 0330 மணி அளவில் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் மன்றத்தின் துணைத் தலைவரும், நமது மன்றத்தின் சார்பில் நடைபெறும் திருக்குறள் வகுப்பின் ஆசிரியருமான திரு.சேதுமாதவன் அவர்களும் பொருளாளர் திரு.செந்தில் அவர்களும் கலந்துகொள்கின்றனர். 



திருக்குறள் வகுப்பில் கலந்துகொள்ளுபவர்களின் பொருளதவியோடு செயல்படும் இத்திட்டம் தொடர்ந்து சிறப்புற நடைபெற தங்களின் ஆதரவினை நல்குவதோடு, இயன்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

திருக்குறள் நூல் வழங்கும் விழா2.jpg

--
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையாகக் கொள்வீர் உலகத் தமிழரே! 
தினமலர் இதழை புறக்கணிப்பதே தமிழனின் கடமையாகக் கொள்வீர்!

No comments:

Post a Comment