வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வாங்குவதில்லை என இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளதால் இலங்கை நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் மாலை 131.35 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு நேற்று காலை 132.20 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள இலங்கை நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும்.
ஏற்கனவே கடந்த மார்ச் 19 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணய மதிப்பு 131. 60 ரூபாவாக வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் பின்னர் சற்று நாணய மதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்டபோதும் கடந்த இரு வாரங்களாக மீண்டும் வீழ்ச்சி கண்டு வருகிறது. __
No comments:
Post a Comment