லண்டனில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி ஸ்ரீசத்தாதிஸ்ஸ சர்வதேச பௌத்த நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று 24ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போதிலும்; அந்நிலையத்திற்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை.
தமது நிலையத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இந்து ஆலயங்கள், மற்றும் முஸ்லீம் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் சர்வதேச அளவில் சிறிலங்காவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இதை திசை திரும்பும் வகையில் தமது நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லண்டனில் உள்ள சர்வதேச பௌத்த நிலையம் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment