கனடாவின் ஸ்காபரோ நகரில், மார்க்கம் வீதியில் 2691 அறையிலக்கம் 9B என்ற முகவரியில் அமையப் பெற்ற புதிய காரியாலயத்தில் மாவீரர் பணிமனை வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது.
மாவீரரை மனங்களில் நிறுத்திய படி குழுமிய மக்கள் வெள்ளத்துடன் திறப்பு விழா ஆரம்பமானது. முறைப்படியாகக் கனடிய அரசுக்கு அறவித்து தேவையான அனுமதியைப் பெற்றபின் மக்களுக்காக மக்களால் மக்களிடமிருந்த உருவாகியுள்ள செயற்பாட்டாளர்களால் இந்தப் பணிமனை திறந்து வைக்கப்பட்டது,இப்ணிமனைத் திறபுபு நிகழ்வினை, மாவீரராகிவிட்ட மேஜர் நிதிலாவின் அன்னையார் திருமதி செல்வநாயகம் சம்பிரதாயபூர்வமாகக் குத்து விளக்கேற்ற, மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள் வாயிற் கதவில் நாடாவை வெட்டி விழாவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள், தமிழின செயற்பாட்டாளர்கள், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர்கள், உடகவியலாளர்கள் எனப் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகபகும்.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய, பணிமனை திறப்பதற்கான குழுவின் ஒரங்கிணைப்பாளர் திரு சத்தி வேலுப்பிள்ளை அவர்கள், இப்பணிமனையானது, வெறமனே மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துகின்ற பணிமனையாக இல்லாமல் மாவீரரர்களின் பதிவுகளைப் பேணும் வைப்பகமாகவும் அமைய வேண்டும் என்பது தான் தமது நோக்கம் என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கனடியத்தமிழர் பேரவையின் தேசிய ஊடகப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை, தனதுரையில் “மாவீரர்கள் மக்களுக்காகத் தமது வாழ்க்கையை ஆகுதியாக்கியவர்கள்,இத்தகைய புனிதமான செயலைச் செய்தவர்கள் இன்று எங்கோ உறங்குகிறார்கள், இம்மாதத்தில் அவர்களை நினைக்க வேண்டியது எமது கடமை - இப்படி வெளிப்படையாக இப்பணிமனையின் அமைப்பாளர்கள் செய்யும் இநதச் செயலுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்”. என்றார்.
நா.க.த.அ பேராளரான ஈழவேந்தன் 2009 ஆண்டு வரை முப்படைகளையும், சிவில் நிர்வாக அலகுகளையும் கொண்ட நடைமுறை அரசொன்று தமிழீழத்தில் இருந்தது என்பதை நினைவு படுத்தினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேராளர் வின் மகாலிங்கம், நாம் எல்லோரும் எப்படியிருந்தாலும் மனோ பலத்துடன் இருந்து எம் மாவீரர்களக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றார். எம் தமிழ் மக்கள் பிரதிபலன் எதிர்பாராது எங்கள் இனத்துக்கான செயற்பாடுகளில் ஈடபடவேண்டும் என்று தனதுரையில் கேட்டுக் கொண்டார் தேசியத் தலைவரின் மைத்துனரான திரு.ராஜேந்திரம்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய திருமதி உதயா பிரபாகரன், ”இது கார்த்திகை மாதம் மாவீரருக்குரிய மாதம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் கட்டுப்பாட்டுக்குள் இம்மாதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதற்காவே இம் மாவீரர் பணிமனை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இம் மாவீரர் பணிமனை திறக்கப்பட்டுள்ளது போல் 2012ல் மாவீரர் பூங்கா திறப்பதற்கான பரப்புரையில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
இறுதியாக உரையாற்றிய மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாவீரர்கள் சத்திய வேள்வியில் உருகிப் போனவர்கள், தன்னலமின்றித் தமதுயிரைத் தியாகம் செய்தவர்கள் என்றார். அவர் மேலும் பேசுகையில் “இப்பணிமனைப் பணி போன்ற ஆரோக்கியமான பணிகள் தொடர வேண்டும் அதற்கு என் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்” என்றார்
பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள், தமிழின செயற்பாட்டாளர்கள், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர்கள், உடகவியலாளர்கள் எனப் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகபகும்.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய, பணிமனை திறப்பதற்கான குழுவின் ஒரங்கிணைப்பாளர் திரு சத்தி வேலுப்பிள்ளை அவர்கள், இப்பணிமனையானது, வெறமனே மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துகின்ற பணிமனையாக இல்லாமல் மாவீரரர்களின் பதிவுகளைப் பேணும் வைப்பகமாகவும் அமைய வேண்டும் என்பது தான் தமது நோக்கம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த மாவீரா பணிமனை திறக்கப்பட்ட செயற்பாட்டில் எதுவிதமான அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறியதுடன் பணிமனை ஏன் திறக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் குழுமியிருந்தமக்களுக்கு அளித்தார்.
2011 ம் ஆண்டுக்கான மாவீரா தினம் எதிர்வரும் 27ம் திகதி காரல 6மணி முதல் மாலை 10மணி வரை ரொரன்ரோ டவுண்ஸ் வியூ பார்க் மைதானத்தில் 5000 பேர் வரை அமரக்கூடிய மண்டபத்தில் நடைபெறும் என்றும் அத்தினத்தில் மக்கள் பெருந்திரளாக வந்து மாவீரர் தெய்வங்களுக்குத் தமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேராளர் ஜோ அந்தோனி ”இது மாவீரருக்கான காலம் அவர்களுக்கு நாம் இங்கு ஆலயம் அமைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஆலயம் பெரிய அளவில் அமைய வேண்டும். அப்பணியை இப்பணிமனையின் ஏற்பாட்டாளர்கள் செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன், இப்படியான வெளிப்படையான செயற்பாடுகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து கனடியத்தமிழர் பேரவையின் தேசிய ஊடகப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை, தனதுரையில் “மாவீரர்கள் மக்களுக்காகத் தமது வாழ்க்கையை ஆகுதியாக்கியவர்கள்,இத்தகைய புனிதமான செயலைச் செய்தவர்கள் இன்று எங்கோ உறங்குகிறார்கள், இம்மாதத்தில் அவர்களை நினைக்க வேண்டியது எமது கடமை - இப்படி வெளிப்படையாக இப்பணிமனையின் அமைப்பாளர்கள் செய்யும் இநதச் செயலுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்”. என்றார்.
நா.க.த.அ பேராளரான ஈழவேந்தன் 2009 ஆண்டு வரை முப்படைகளையும், சிவில் நிர்வாக அலகுகளையும் கொண்ட நடைமுறை அரசொன்று தமிழீழத்தில் இருந்தது என்பதை நினைவு படுத்தினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேராளர் வின் மகாலிங்கம், நாம் எல்லோரும் எப்படியிருந்தாலும் மனோ பலத்துடன் இருந்து எம் மாவீரர்களக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்றார். எம் தமிழ் மக்கள் பிரதிபலன் எதிர்பாராது எங்கள் இனத்துக்கான செயற்பாடுகளில் ஈடபடவேண்டும் என்று தனதுரையில் கேட்டுக் கொண்டார் தேசியத் தலைவரின் மைத்துனரான திரு.ராஜேந்திரம்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய திருமதி உதயா பிரபாகரன், ”இது கார்த்திகை மாதம் மாவீரருக்குரிய மாதம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் கட்டுப்பாட்டுக்குள் இம்மாதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதற்காவே இம் மாவீரர் பணிமனை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இம் மாவீரர் பணிமனை திறக்கப்பட்டுள்ளது போல் 2012ல் மாவீரர் பூங்கா திறப்பதற்கான பரப்புரையில் எல்லோரும் ஈடுபட வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
இறுதியாக உரையாற்றிய மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாவீரர்கள் சத்திய வேள்வியில் உருகிப் போனவர்கள், தன்னலமின்றித் தமதுயிரைத் தியாகம் செய்தவர்கள் என்றார். அவர் மேலும் பேசுகையில் “இப்பணிமனைப் பணி போன்ற ஆரோக்கியமான பணிகள் தொடர வேண்டும் அதற்கு என் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்” என்றார்
No comments:
Post a Comment