Translate

Sunday, 6 November 2011

கூடங்குளம்.. மக்கள் புரட்சி வெடிக்கும்: பழ. நெடுமாறன்

மதுரை, நவ.6,2011
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால், தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மதுரை பேச்சியம்மன் படித்துறையில் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் உள்பட 11 அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதற்கு தலைமை வகித்த பழ. நெடுமாறன் பேசுகையில், "தென்மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக மனிதநேய அடிப்படையில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த அணுமின் நிலையத்தால் கிடைக்கும் மின்சாரத்தை பல மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அந்த அணுமின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்பை மட்டும் தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டுமா?

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்கிறார்கள். மின் தட்டுப்பாடுள்ள தமிழ்நாட்டில் அந்த அணுமின் நிலையம் வந்தால் நல்லது தானே என மக்களை நம்பவைக்க முயற்சி நடக்கிறது.

இந்த அணுமின் நிலையத்தில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? மின்சாரம் தயாரிக்கும் போது புளூடோனியம் கிடைக்கும். அதன் மூலம் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம் என மத்திய அரசு திட்டம் போடுகிறது. 

மக்களின் எதிர்ப்பை மீறி, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால், தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்," என்றார் பழ.நெடுமாறன்.  

No comments:

Post a Comment