நாட்டை ஆட்டிப்படைக்கும் நவம்பர்! நல்லவர் கெட்டவர்களை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
நவம்பர் மாதம் என்பது அனைத்து மக்களுக்கும் ஒரு வரபிரசாதமான மாதம். ஏனெனில் அந்த மாதம் வருணபகவான் மழையை வாரி வழங்கும் மாதம்.
அதனுடன்தான் விவசாயப் பெருமக்களின் அனைத்து விவசாய நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படுகின்றது.
அந்த விவசாய மக்களின் வியர்வையில் நாம் எமது வயிற்றுப் பசியையும் போக்குகின்றோம்.
இது இவ்வாறிருக்க கார்த்திகை விளக்கீடும் இம் மாதத்தில் வருகை தந்து எமது நாட்டைப் பிரகாசிக்க வைக்கின்றது. எங்கும் ஒளிமயமான மாதமும் பயனுள்ள மாதமும்தான் இந்த நவம்பர் மாதம்.
ஆனால் இந்த நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இந்த நாட்டை ஆட்டிப்படைத்துள்ளார்கள், ஆட்சி செய்து வருகின்றார்கள், அரிவருடிகளாக ஒட்டியும் இருக்கின்றார்கள்.
அதாவது இந் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (நவம்பர்-18), தமிழீழத் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர்-26), இவர்களுடன் ஒட்டுண்ணிகளின் தலைமைத்துவங்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (நவம்பர்-10), கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் (நவம்பர்-07).
எனவே இவர்களில் யார் நல்வர்கள், யார் கெட்டவர்கள் என மக்கள் ஆகிய நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் நவம்பர் மாதம் ஒரு நல்ல மாதம் என்பதை மறந்து விடாதீர்கள்
No comments:
Post a Comment