அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் அடங்கிய குழு அக்டோபர் 26-ஆம்நாளன்று அமெரிக்கா வந்தடைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே தமிழ் பாராளுமன்றகுழுவை பிரத்தியேகமாக அமெரிக்கா வரவழைத்து, பேச்சுக்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழர்களுக்கும் அவர்தம் அரசியல் போராட்டத்திற்கும் கிடைத்தவெற்றியாகவே கருதப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, சிறிலங்கா அரசுடன் பேசி தீர்வைப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினருக்குஆலோசனை வழங்கப்பட்டதாக ஊடகங்கள் தமது ஊகத்தை வெளியிட்டன. அத்துடன், போர்க் குற்றச்சாட்டு என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அழுங்குப் பிடியாக இல்லாமல்அதனைப் பயன்படுத்தி தமக்கான நலன்களை வென்றெடுப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் அதற்கே ஆதரவாகச் செயற்படும் என்றும்அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் குறித்த ஊடகங்கள் தமது ஆரூடங்களை வெளியிட்டன.
இவ் ஊடகங்களில் கூற்றுக்கள் சரியானதே என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத்தமிழர்களின் அரசியல்பிரதிநிதிகள் என்பதை தமது வாக்குகள் மூலமாக பல தடவைகள் ஈழத்தமிழர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். விடுதலைப்புலிகளின் ஆசியுடன் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பேஇவ் அரசியல் கட்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் தலைமைத்துவ வகிபாகத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்புபலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக அக்டோபர் 29-ஆம் நாளன்றுபுலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் கனடா நாடு வந்தடைந்தது குறித்த குழு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையை ஆரம்பித்து வைத்தது குறித்த குழு. அத்துடன், பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தது மட்டுமன்றி தமிழர்கள்அதிகமாக வாழும் ஸ்காபுறோ என்கிற இடத்தில் அமைத்துள்ள ஐயப்பன் இந்து ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் உட்பட சில நிகழ்சிகளில் கலந்துகொண்டனர் குறித்தபாராளுமன்ற உறுப்பினர்கள். இவ் நிகழ்வுகளில் பல தமிழ் மக்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றது குறித்த குழு. அக்டோபர் 31-ஆம் நாளன்று கனடாவின் தலைநகர் ஒட்டாவாசென்று கனேடிய வெளிவிவகார அதிகாரிகளைச் சந்தித்து ஈழத்தமிழர்களின் அரசியல் கோட்பாட்டை விரிவாக எடுத்துகூறியது குறித்த குழு. பின்னர் கனடாவிலிருந்து மீண்டும்அமெரிக்கா சென்றது. நவம்பர் 5-ஆம் நாளன்று இங்கிலாந்து சென்று பல தரப்பட்டவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளது இக்குழு.
அமெரிக்கப் பயணம் தரும் செய்தி என்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் தமிழர் தரப்பினர் எதிர்பார்த்தது போல் வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு இருகாரணங்கள் உண்டு. முதலாவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹில்லரி கிளிண்டன் அவர்களை சந்திப்பதாகத்தான் நிகழ்சிநிரல் தீட்டப்பட்டது. சிறிலங்கா அரசின் பலத்தஎதிர்ப்புக்கு மத்தியில்தான் குறித்த கலந்துரையாடலை செய்ய முடியாமல் போய்விட்டது. இது சிறிலங்காவுக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகவேதான் கருத வேண்டும்.
அத்துடன், இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசியப் பிரிவு, ஆசியப் பிரிவு மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பிரிவின் உயரதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு தமிழர் தரப்புக்குகிடைத்தது என்பது ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு வால் பிடித்தவர்கள்தான் கூட்டமைப்பினர் என்று பரவலாகசிறிலங்கா அரசியல்வாதிகளினாலும், பல ஊடகங்களினாலும் விசமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்துள்ள இந்நிலைமையில்தான், குறித்த இராஜதந்திரச் சந்திப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் விடிவுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஈழப் போராட்டத்திற்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகவே கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் மட்டுமே பேச்சுக்களில் கலந்து கொண்டு வந்திருந்தனர். தமிழர் தரப்பினர் வேறு நாடுகள் சென்று உத்தியோகபூர்வமாகஈழத்தமிழர் குறித்து அரசியல் பேச்சுக்களை இதுவரை காலம்வரை செய்யவில்லை. ஆகவே, குறித்த வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பயணங்களே ஈழத்தமிழரின் அரசியல்பிரச்சினையை உலக அரங்கில் முன்வைக்க உறுதுணையாக இருக்கும்.
உலக இராஜதந்திர மரபு என்னவெனில், ஒரு இறமையுள்ள நாட்டின் உள்விவகாரத்தை இன்னொரு நாட்டில் வைத்துப் பேசுவது இராஜதந்திர விழுமியங்களுக்கு எதிரானது. ஆகவே,இப்படியான பேச்சுக்களைக் குறித்த இறமையுள்ள நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஒப்போதலுடனேயே நடத்த வேண்டும். ஆனால், தமிழர் தரப்பினரின் சந்திப்புக்கள்அனைத்துமே சிறிலங்கா அரசின் ஒப்புதலின்றி நடைபெற்றுள்ளன. இது எதைக் காட்டுகிறதென்றால், தமிழீழ தேசம் என்பது அறிவிக்கப்படாத நாடாகவே அமெரிக்கா, கனடா மற்றும்பிரித்தானிய அரசுகள் கருதுகிறது போலும். இதனை மையமாகவைத்தே ஈழத்தமிழர்கள் தமது அடுத்த கட்ட இராஜதந்திர நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.
சிறிலங்கா அரசிற்குக் கிடைத்த இரண்டாவது இராஜதந்திர வெற்றி என்னவென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம்பான் கீ மூனை நவம்பர் 1-ஆம் நாளன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையிலேயேதான், கூட்டமைப்பின் குழுவினர்கனடாவிலிருந்து மீண்டும் அமெரிக்கா சென்றனர். ஆனால், கூட்டமைப்பினருக்கு ஏமாற்றம் தரும் செய்தியே இறுதி நேரத்தில் ஐநா அதிகாரிகளினால் கொடுக்கப்பட்டது.
சிங்கள அரசின் அழுத்ததிற்கு ஏற்றவாறு காய்நகர்த்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், ஐநாவும் செய்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக,பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையாகவேதான் அமெரிக்க மற்றும் ஐநாவின் செயற்பாடுகள் அமைந்தன. தமிழர்களின் போராட்டத்தைவெளிப்படையாகவே ஏற்றுத்தான் தமிழர் தரப்பினரை அமெரிக்கா வரவழைத்தது அமெரிக்க அரசு. அத்துடன், சிங்கள அரசையும் பகைக்க முடியாமல் அதனுடைய அழுத்தத்தைஅமெரிக்க அரசு ஒருபோதும் தட்டாது என்பதற்கிணங்கவேதான் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் திடீரென தனது திட்டத்தை மாற்றினார். இதைப் போலவேதான் பான் கீ மூனின்செயற்பாடும் அமைந்துள்ளது.
பான் கீ மூனுடனான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதால், ஐ.நா பொதுச் செயலாளரின் அரசியல் விவகாரச் செயலாளர் லைன் பாஸ்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பிந்திய மீள்குடியமர்வு, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக் கூறினார். அத்துடன் ஐ.நா பொதுச்செயலாளரிடம் கையளிப்பதற்காக சிறிலங்கா தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவரது அரசியல்விவகாரச் செயலாளர் லைன பாஸ்கோவிடம் கையளித்தனர். ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சந்திப்புக்களை இரத்துச் செய்துவிட்டு பிரான்ஸ் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.அண்மையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த லிபியாவுக்குச் செல்வதற்காக பிரான்ஸ் சென்றதாலேயே, தமிழ்த் தரப்பினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல உள்ளகச் சந்திப்புகளைபான் கீ மூன் கைவிட்டதாக அறிவிக்கபட்டது.
ஆக அமெரிக்க பிரயாணம் தரும் செய்தி என்னவென்றால், அமெரிக்கா மற்றும் ஐநா என்றாலோ சரி அல்லது வேறு உலகின் நாடுகள் என்றாலோ சரி அனைவருமே ஒரு நாணயத்தின்இரு பக்கங்களையும் அரவணைத்து செல்வதையே விரும்புகிறார்கள் போலும். குறிப்பாக, தமக்கு எதிராக எந்த சூழ்ச்சிகரமான வேலைகளையும் செய்ய முன்வராத எவரிடத்திலும்பகையை சம்பாதிக்க விரும்பமாட்டார்கள் எந்தவொரு அறிவுள்ளவரும். அதனடிப்படையிலையேதான், ஐநா மற்றும் அமெரிக்க அரசு செய்துள்ளது போலும். எது என்னவாகினும்,ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே தமிழர் தரப்பினருடனான சந்திப்புக்கள்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐக்கிய நாடுகளுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியதாவது: “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா.செயலாளர் பான்கீ மூனை சந்திக்கப்போவதாக அங்கும் இங்கும் பெருமை கூறித் திரிந்தனர். ஆனால், வீரவசனம் பேசிய அவர்களால் ஐ.நா. செயலாளர் பான் கீ முனை சந்திக்க முடியாமல் போனது.இது அவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட தோல்வியாகும். இனியும் பெருமை கூறித் திரியாது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேண்டும். பான் கீ மூனை சந்திக்கவுள்ளோம் எனஅனல் பறக்கும் வசனங்களை அள்ளிவீசிய கூட்டமைப்பினர் குறைந்தளவு அந்தஸ்துள்ள அதிகாரியொருவரையே சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பால் எவ்வித மாற்றமும்நிகழப்போவதில்லை. அதிகாரமில்லாத அதிகாரியை சந்திப்பால் ஏற்படப்போகும் மாற்றம்தான் என்ன? ஐ.நா. செயலரை சந்தித்துக் கூறுவோம், சர்வதேசத்திடம் சொல்வோம் எனஉள்நாட்டில் கோஷமிட்டு மிரட்டித்திரியும் நடவடிக்கைகளை இனியாவது கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்."
ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜெனீவாவில் மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச சதியாகாவிட்டால் தற்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமெரிக்கா சென்று பேசுவது எவ்வாறு சதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். “யுத்தம்முடிந்து ஏறக்குறைய இரண்டரை வருடங்களாகி விட்டன. ஆனால் மக்களின் சுதந்திரம் பெருமளவில் குறைந்து விட்டது. போர் முடிந்தபின் நாட்டில் சமாதானம் நிலவும், மக்கள்நிம்மதியாக வாழ்வார்கள், ஒற்றுமையாக வாழ்வார்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்த்தோம், நாட்டு மக்கள்எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். காவற்துறையினர் செய்யவேண்டிய கடமைகளை இன்று இராணுவமே செய்து வருகின்றது. ஆயுதபாணிகளான இராணுவத்திற்கு பதில் இன்று குண்டாந்தடி இராணுவம் ஆட்சி புரிகின்றது. இந்நிலை வடபகுதிஇளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது," இவ்வாறு கூறியுள்ளார் தயாசிறி ஜயசேகர.
மேலும் அவர் கூறுகையில், “தமிழ் மக்கள் விரும்பும்படியல்லாது அரசு விரும்பும்படி தமிழ் மக்களை ஆள அரசு முயற்சிக்கின்றது. தீர்வுக்கான பேச்சுவார்த்தையை எவ்விதகாரணமேயின்றி வெறுமனே இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. எதிர்கட்சிகளால் இன்று இந்நாட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. போதைப்பொருள் முதலாளிகள் மற்றும்பாதாள உலகத்தின் அடக்குறை எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது. வடக்கில் போலவே இன்று தெற்கிலும் அடக்குறைபிரயோகிக்கப்படுகின்றது.
பெப்ரவரி மாதத்தில் என் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்றைய தினம் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்குசீர்குலைந்துவிட்டது என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்? நாட்டில் நிலவும் இத்தகைய சூழ்நிலைகளின் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்அமெரிக்கா சென்று தமது பிரச்சினையைக் கூறத் தலைப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிரஅவர்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்தச் சூழ்நிலையில் தமது பிரச்சினை குறித்து பேசுவதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் நியாயமானதெனவே கருதுகின்றேன்."
ஸ்காபுறோ மாநகரில் இடம்பெற்ற கூட்டத்தில் இரா. சம்பந்தன் பேசியதாவது: “சர்வதேசம் நமது பிரச்சனையை தீர்த்து வைக்கத் தயாராகவுள்ளபோது நமது நாட்டு ஜனாதிபதி அதில்விருப்பமுள்ளவராகத் தெரியவில்லை. அவரது விரும்பத்தகாத நடவடிக்கைகளினால் அவர் பல இடங்களில் அவமானப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக சில தினங்களுக்குமுன்னர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்த பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட கனேடியப் பிரதமரின் புறக்கணிப்புக்கு மகிந்தா இராஜபக்ச உள்ளாக வேண்டிவந்துவிட்டது. இது அவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கனடாவின் பிரதமர் ஏற்கனவே பல விண்ணப்பங்களை சிறிலங்கா அரசிற்கும் அதன் ஜனாதிபதிக்கும்விடுத்துள்ளார். ஆனால் அவைகளுக்கு தகுந்த பதில் தராத மகிந்தா இராஜபக்சாவின் உரைகளை தான் செவிமடுக்கப்போவதில்லை என்ற செய்தியையே கனடியப் பிரதமர் நமதுஜனாதிபதிக்கு தந்துள்ளார். எனவே சிறிலங்கா அரசு உடனடியாக நமது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய ஒரு கடப்பாடு உள்ளது. எனவே கடந்தகாலங்களைப் போல நமது புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் எதிர்காலத்திலும் நமது தாயக மக்களைப் பாதுகாக்கும் வகையில் இங்கு குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறுசெய்தால் நாம் தீர்வுகள் பெற்ற ஒரு சமூகமான அந்த மண்ணில் நிம்மதியுடன் வாழ முடியும்."
மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், “எமது அமெரிக்க விஜயத்தை உலகெங்கிலும் உள்ள நமது தமிழ் பேசும் உறவுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கையில் நாம் அந்தவிஜயத்தின் முதலாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்த பின்னர் கனடா வந்துள்ளோம். எமது குழுவிற்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில்நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எமது திருப்திக்கு ஏற்ற வகையில் இடம்பெற்றன. முக்கியமாக நமது மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக நமது குரலை தொடர்ச்சியாகநாம் உரத்து ஒலிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான கவனத்தை உலகிற்கு கேட்கும் வண்ணம் மிகுந்த வலுச்சேர்த்து பேச வேண்டும்.அதில் எவ்விதமான தளர்ச்சியையும் தமிழர் தலைமை காட்டக் கூடாது போன்ற கருத்துக்கள் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளினால் எம்மோடு பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனவே எமது அமெரிக்க விஜயம் எமக்கு நல்ல பலனைத் தரும் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்."
தமிழீழத் தமிழரின் கடந்த 60 வருடங்களுக்கு மேலான போராட்டங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் கிடைத்த வெற்றியே தமிழ்த் தேசியக் கூட்டணியினருடனான சந்திப்புக்கள்என்று கூறினால் மிகையாகாது. சிறிலங்காவின் எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்தாமல், அவர்களும் வேண்டும் அத்துடன் தமிழர்களின் கோரிக்கைகளும் நியாயமானதுஎன்கிற வகையில் செயற்பட்டுள்ளார்கள் ஐநா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானிய அரசுகள் என்பதே உண்மை. அனைத்துமே நல்லதாக நடந்துள்ளதுடன், இனி வரும் காலங்கள்ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இராஜதந்திர காய்நகர்த்தலை மேற்கொள்வதற்கு ஆரம்பமாகவேதான் இச்சந்திப்புக்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com
No comments:
Post a Comment