கேரள எல்லைக்குள் நுழையக் கூடிய 13 வாயில்களில் மிகப் பெரிய மறியல் போராட்டாத்தை வை.கோ அறிவித்துள்ளார். அவர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு வலுவான போராட்டத்தை அறிவித்துள்ள அதே நேரத்தில், தமிழகத்தில் வசிக்கும் கேரளத்தவர்களையும் கடைகளையும் தாக்குவதைக் கோழைத்தனம் எனவும் இளைஞர்கள் அப்படிச் செய்யக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது. ஈழப் பிரச்சினையோடு நிறுத்திக் கொள்ளாமல் பரமக்குடி, கூடங்குளம், பழங்குடி இருளர் மீதான வன்முறை முதலான பிரச்சினைகளில் அவரது செயற்பாடுகள் வரவேற்கத் தக்கவைகளாக உள்ளன. மரண தண்டனைப் பிரச்சினையிலும் கூட அவரது செயற்பாடே பயன் மிக்கதாக இருந்தது. இந்தத் திசையில் தொடரட்டும் அவர் பணி.
No comments:
Post a Comment