Translate

Monday, 26 December 2011

தமிழ்தேவன் நாங்கள் தமிழர்கள் வைகோ நிலை பாடும் - முல்லை பெரியாரும் - முடிவுறா பாதையும்.

ஈழத்து சிக்கலில் சரியான வழிகாட்டுதல் இல்லமால் ,தமிழர்களை மூர்க்கமாக போராட விடாமல் முடக்கியவர்கள், 

மூவர் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும், செயலலிதா மனது வைத்தால் மூவரையும் விடுதலை செய்து விடலாம் என்று கூறி தமிழர்களை தமிழக அரசுக்கு எதிராக போராட செய்தனர்.


செங்கொடியின் மரணத்திற்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு செயலிதா என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிய பிறகு இன்று நீதி மன்றத்தால் மட்டுமே முடியும் என்று கூறி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.முதலில் ஏன் இந்த தவறான வழிகாட்டுதல் ?

முல்லை பெரியாறு சிக்கலில் கேரளாவிற்கு பொருளாதார தடை விதித்தால் போதும் நம் வழிக்கு வந்து விடுவார்கள் என்று கூறி தமிழக மக்களின் போராட்ட குணத்தை மழுங்கடித்து அவர்களை திசை திருப்பும் வேலையோ என்று என்ன தோன்றுகிறது.

இங்கு 5000 ௦கோடிக்கு இலவய திட்டம் செயல் படுத்தும் போது அது போன்று அவர்களால் கர்நாடகாவிலிருந்து பொருட்களை வர வழைக்க முடியாதா?விலை இல்லா அரிசியை இங்கு கொடுக்கும் போது அங்கு கொடுக்க முடியாதா ?எல்லாம் முடியும். தேவை பொருளாதாரம் மட்டுமே அது அங்கு உண்டு.

கேரளாவில் காய்கறி களின் விலை ரூ 20 க்கு மிகாமல் இருக்கிறது. எல்லையோரம் தமிழர்கள் வாழும் பகுதியில் தான் பொருட்கள் விலை கூடுதலாக இருக்கிறது .

தமிழர்கள் கடையடைப்பு உண்ணாநிலை,கனர வாகனம் வேலை நிறுத்தம் ,தொழில் முடக்கம் , பொருளாதார முற்றுகை என்று தங்களை வருத்தி கொண்டு இதுவரை 2000 கோடிக்கு மேல் தமிழர்களுக்கு நட்டம். இது எந்த வகையில் கேரளாவை பாதித்தது. 

நீ உண்ணா நிலையிருந்து செத்தால் கேரளா அரசுக்கு ஏன் வலிக்க போகிறது .

தமிழர்கள் வணிகம் செய்ய வேண்டும். சிக்கல் தீரும் வரை, மலையாளிகள் இங்கு கடையை அடைக்க வேண்டும். ஒருவரும் வேலைக்கு போக கூடாது. என்று இங்குள்ள மலையாளிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இடுக்கியில் தான் மூணாறு உள்ளது. மூணாறில் தான் தேவிகுளம் பீர்மேடு உள்ளது .கேரளாவில் மிக பெரிய மாவட்டமே இடுக்கிதான் தேவிகுளம் பீர்மேடு என்று ஒன்றுக்கும் உதவாத பகுதியை ஏன் கேட்கிறார்கள்.

தமிழர்கள் வாழக் கூடிய மூணாறு பகுதியை தமிழர் நாட்டோடு இணைக்க சொல்லி போராட வேண்டும்.கேரளாவின் மொத்த நீராதாரத்தில் பெரும் பகுதி இங்கிருந்தே கிடைக்கிறது .இது தமிழர்கள் வாழும் பகுதி இன்று வரை தமிழர்கள் மட்டுமே இங்கு சட்ட மன்ற உறுப்பினராக முடியும் . ஒட்டு மொத்த இடுக்கி மாவட்டம் என்றால் அதில் மலையாளிகள் கூடுதலாக வாழ்கிறார்கள்.

இயல்பாக இங்குள்ள மலையாளிகள் மேல் தமிழர்களுக்கு வரக் கூடிய சினத்தை திசை திருப்பி, மலையாளிகள் தாக்கப்பட்டால் மலையாளிகள் வாக்கு பறி போய் விடுமோ என்று எண்ணி , அரசியல் ஆதாயம் தேடுவதற்கே பொருளாதார தடை என்ற நீண்ட கால ஆயுதத்தை இங்குள்ள அரசியல் தலைவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஜாய் அலுகாஸ் மணப்புரம் முத்தூட் போன்ற மிக பெரிய நிறுவனங்களை அடித்து உடைப்பதினால் அவனுக்கு பொருள் நட்டம் மட்டுமே அதை சரி செய்து வணிகம் செய்வான் .

ஆனால் இங்குள்ள சாதாராண மலையாளிகளுக்கு சிறிய அளவில் நட்டத்தை ஏற்படுத்தினாலே இவன் அழுகுரல் கேரளாவில் எதிரொலிக்கும் ,

இன்றும் கேரளாவில் இருந்து அகதியாக வந்தவர்கள் பணக்கார தமிழர்கள் அல்ல சாதாரணா ஏழை தமிழர்கள் .

தமிழர்கள் ஒற்றுமையாவதை விரும்பாத அரசியல் வாதிகள்,இங்குள்ள மலையாளிகள் தாக்கப்பட்டால் மலையாளிகள் வாக்கு பறி போய் விடுமோ என்று எண்ணி , மலையாளிகளை காப்பாற்றி, நம் போராட்டத்தை மழுக்கடிக்கும் வேலைதான் பொருளாதார தடை என்பது.

நமது இலக்கு மூணாறு மற்றும் இங்குள்ள மலையாளிகளை முடக்குவது .நம்மை நாமே வருத்தி கொள்வது அல்ல .

No comments:

Post a Comment