Translate

Monday, 26 December 2011

தடையை மீறி கூட்டம் : வைகோ, பாரதிராஜா, தங்கர் பச்சான் மீது வழக்கு பதிவு !


மெரினா கடற்கரையில் தடையை மீறி கூட்டம் நடத்தியதாக மதிமுக பொது செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் தங்கர் பச்சான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ வேல்முருகன், கவிஞர் தாமரை உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 17 இயக்கம் சார்பில் மெரினாவில் ஞாயிற்றுகிழமையன்று கூட்டம் நடந்தது.
முல்லை பெரியார் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று அறப்போராட்டம் நடந்தது. மவுன ஊர்வலத்திற்கு அனுமதி பெற்று விட்டு பொதுக்கூட்டம் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment