Translate

Tuesday, 3 January 2012

புலிகளின் கொள்கையை பிரபாகரன் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றபோதும் உறவு நன்றாகவே இருந்தது.


இந்தியா பாதுகாப்பு ரீதியாக இலங்கையில் தங்கியுள்ளது. எனவே மூன்றாவது நாடு (சீனா) ஒன்றுடனான கொழும்பின் உறவு கவலை அளிக்கக்கூடியது தான் அதற்காக எமது நலன்களை அவர்கள் மீது திணிக்க முடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, புதுடில்லியில் இருந்து வெளியாகும் ”பிஸ்னஸ் ஸ்ரான்டட்”இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளின் கொள்கையை பிரபாகரன் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றபோது கூட உறவு நன்றாகவே இருந்தது. இலங்கையுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிக் கொள்வதற்காக இந்திய அரசு எந்தக் குழுவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே உதவி வழங்கவில்லை.
பாதுகாப்பு ரீதியாக, நாங்கள் இலங்கையில் தங்கியுள்ளோம். அங்கு பாதுகாப்புப் பற்றிய பாரிய கவலைகள் உள்ளன. அவை இந்தியப் பெருங்கடலில் இரு நாடுகளையும் பாதிக்கக் கூடியவை. நாங்கள் தொடர்ந்தும் இலங்கையை வலப்புறமாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறோம். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும்.
நான் ஜனவரி 16ஆம் திகதி கொழும்புக்குச் செல்லவுள்ளேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறேன்.
எமது அயல்நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது குறித்து நாங்கள் கரிசனை கொண்டிருக்கிறோம். மூன்றாவது நாடு (சீனா) ஒன்றுடனான அவர்களின் உறவுகள் கவலையளிக்கக் கூடியவை தான். ஆனால் எமது நலனை அவர்கள் மீது திணிக்க முடியாது.
அயல் நாடுகள் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளின் அணுகுமுறையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அவர்களுடனான எமது உறவுகளை நல்லெண்ணம் மற்றும் நல்ல அயலுறவுகளின் அடிப்படையில் வைத்துக் கொள்வதற்கு விரும்புகிறோம். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment