Translate

Monday, 2 January 2012

இந்தியாவைச் சுற்றி சுருக்குப் போடும் சீனா………?


இந்தியாவைச் சுற்றி சுருக்குப் போடும் சீனா
  • ஒரு பக்கத்தில் இந்தியாவும், இலங்கையும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் அதிகரித்த தலையீடுகள் இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று கூறிக் கொண்டிருக்கின்றன.
  • ஆனால் சீனாவோ இந்து சமுத்திரத்தில் தனது கால்களை அகல விரித்துக் கொண்டிருக்கிறது.
  •  இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படையுடனான நெருக்கத்தை சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  •  கடந்தவாரம் கொழும்பு வந்த சீன ஜெனரல் இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சி வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிப் பேசியுள்ளார்.
  • அதில் முக்கியமானது, முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைப் படையினர் பயன்படுத்திய தரைப்போர் உபாயங்கள் பற்றியது. இந்த விபரங்களை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சீன ஜெனரலிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
  •  போர் முடிந்து மூன்றாண்டுகளாகப் போகின்ற நிலையில், இப்போது தான் தரைப் போரின் உபாயங்களை சீனா பெறுகிறது என்பது நம்பமுடியாத கதையாகவே உள்ளது.
  • ஏனென்றால் போரின் அச்சாணியாக இருந்து உதவிய நாடு சீனா. அதைவிட உலகளாவிய வல்லரசுக் கனவோடு உலாவும் சீனா, புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த உபாயங்கள் பற்றி இதுவரை விசாரித்து அறியாதிருந்தது என்று யாராவது சொன்னால் அதை நம்ப முடியாது.
  •  ஏற்கனவே இலங்கை இராணுவம் நடத்திய போர் அனுபவப்பகிர்வு கருத்தரங்கில் இதுபற்றி விளக்கப்பட்டுள்ளது. அதைவிட இதே, சீன ஜெனரல் ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் கொழும்பு வந்தபோதும் இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.
  • ஆனாலும், இப்போதும் அந்த விடயம் பற்றிக் கேட்டறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுவது முக்கியமானது.
  • போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல வெளிவராத தகவல்கள், இரகசியங்கள் உள்ளன. அவையே இந்தச் சந்திப்பில் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
  • ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் மேற்கொள்ளப்படும் போது, சீனாவே பிரதான கவசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான இரகசியங்கள் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
  • இவை சீனாவுக்கு அவசியமானவை. இலங்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் உண்மையை அறிந்து கொள்ள சீனா முயன்றிருக்கலாம்.
  • இலங்கைக்கு சீனா தொடர்ந்து நிதியுதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பது வெறுமனே பிரதிபலன் எதிர்பார்த்திராத நட்புசார்ந்த ஒன்று என்று எவராவது கருதினால் அது முட்டாள்தனம்.

No comments:

Post a Comment