தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நால்வர் இன்று தென்னாபிரிக்கா பயணமாகின்றனர்.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நூற்றுண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் அங்கு பயணமாகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ சுமந்திரன், செல்வன் அடைக்கலநாதன் ஆகியோரே இந்தக் குழுவில் இடம்பெற்றள்ளனர்.
டெலோ இயக்கத்தைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் இம்முறை கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment