நாடு கடந்த தமிழீழ அரசின் அனுசரணையுடன் கனடிய மனித உரிமைகளுக்கான மையம் நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கு
இலங்கைத் தீவில் தமிழருக்கு எதிராக நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளி உலகிற்குக் கொணர்ந்து மக்களுக்கு நீதி வேண்டிமாபெரும் அரசியல் கருத்தரங்கு கனடியப் பாராளுமன்றத்தில் தமிழீழ நாடு கடந்த அரசின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.
கனடிய மனித உரிமை மையம் இது போன்ற சிறிய கருத்தரங்குகளை முன்னரும் நடத்தியுள்ளபோதும், இம்மாபெரும் தமிழரின் உரிமைக்கான மகாநாட்டை ஜனநாயக வழியில் அமைக்கப்பட்ட உலகளாவிய ஈழத்தமிழரின் அரசாங்கமான நாடுகடந்த அரசுடன் இணைந்து ஒருமைப்பட்ட குரலாக நடத்துவது பெருமைக்குரிய விடயமாகும்.
இம்மகாநாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட கனடிய நாடு கடந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர். சிறப்பு அம்சமாக கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன்பெயாட் அவர்கள் கனடாவின் இலங்கை சம்பந்தமான கொள்கை விளக்க உரையை நடத்தவுள்ளார்.
இம்மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக நாடு கடந்த அரசின் வெளிவிவகார அமைச்சர் தயாபரன் கனடா வந்துள்ளார். இம்மகாநாட்டை அடுத்து இரண்டு அமைச்சருக்குமான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இம்மகாநாட்டில் தமிழ்மக்கள் பெருமளவில் பங்குபற்றி எமது மக்களின் ஒன்று பட்ட குரலை எதிர்வரும் மார்ச் மாதம் 27ந் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைச்சபையில் ஒலிக்க உதவிட வேண்டுமென்று தமிழீழ நாடுகடந்த அரசும், கனடிய மனித உரிமைகளுக்கான மையமும் வேண்டி நிற்கின்றன.
No comments:
Post a Comment