Translate

Monday, 2 January 2012

தன்னிகரில்லா தமிழன்

ஆங்கில புத்தாண்டு கொண்டாடி தன்னை மறந்த தமிழர்களுக்கு,
இந்த தன்னிகரில்லா தமிழனின் தலை நிமிர்ந்த வணக்கங்கள்.........


தமிழ் புத்தாண்டை தழைகீழாய் மாற்றி சந்தோச பட்டீர்..
ஆங்கிலத்தில் அண்டிட அன்னை தமிழை கொன்று விட்டீர்...
கடந்த ஆண்டு நம்மை காரி உமிழ்ந்து விட்டது..
இந்த ஆண்டு என்ன வாழ்த்தவா போகிறது !!!!
தமிழனை தமிழனே தமிழனாய் பார்க்கும் வரை--இந்த ஆண்டல்ல
எந்த ஆண்டும் இழி ஆண்டே ....அது வரை நமக்கு பழி ஆண்டே !!!



அடுத்த வீடு எரியும் போது அமைதி காத்த நீ ......
தன் வீடும் எரியும் என்பதை அறிய மறந்தாய்...
அது எரியும் போது அழுது புரண்டாய் ..
அன்னை தமிழ் அடுத்தவரை
வெறுத்தவள் இல்லை - அஃதே
அவளை அழிக்கும் பொழுது அதை பொருப்பவளும் இல்லை .....

வீராணம் வரும் என்று வீறு கொண்டு
வெறுத்தே போய் விட்டோம்..
காவிரி தாயோ எம் மண்ணின் தாகம் தீர்க்க
தவியாய் தவிக்க விடடாள்..

முல்லை பெரியாரோ முடங்கி விடும் போலிருக்கு ..
தடை கல்லையும் படி கல்லாக்கும் தமிழனுக்கு ..
எல்லா பக்கமிருந்தும் இடி கல் இறங்கினால் ,,,
எப்படி கொண்டாடுவான் புத்தாண்டு...

இத்தனைக்கும் தேவை புது விடிவு ..
அதற்கெடுக்க வேண்டும் புது முடிவு..
மத்தியமே மாநிலம் காக்க கையை கொடு - இல்லை
எங்கள் பிடியை விட்டு விடு ...
ஏ....
இந்திய தாயே
எங்கள் தமிழகத்தை உன்னிலிருந்து தனித்து விடு..
எங்கள் ஈழத்தை எங்களோடு இணைத்து விடு..
உலகெல்லாம் பரவிய தமிழன் எல்லாம் ஒன்று சேர ,,,,
உருவாகும் புது நாடு ..
அன்றுதான் அது தமிழ்(தமிழர்) நாடு.....
அப்போது கொண்டாடுவான் தமிழன் புத்தாண்டு - அதுவும்
நம் மங்கா தமிழ் புத்தாண்டு........

இவண்-
தமிழனை தமிழனாய் பார்க்கும் தன்னிகரில்லா தமிழன்

No comments:

Post a Comment