இலங்கையைக் காப்பாற்ற முடியாது - நவநீதம் பிள்ளை
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையிடம் தெவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசு தலைமையிலான குழுவினர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஆணைக் குழுவின் அறிக்கையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான எந்தப் பரிந்துரைகளும் செய்யப்படாதது குறித்து நவநீதம் பிள்ளை, அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவினால் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பிரிசு கண்டனம் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த நவநீதம் பிள்ளை, இவ்விடயத்தில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தவே அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், நவநீதம் பிள்ளையின் இந்தப் பதில் பீரிஸ் தலைமையிலான குழுவிற்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் இந்த நகர்வு, இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைத் தடம்புரளச் செய்துவிடும் என்று நவநீதம்பிள்ளையிடம் கோபமாகப் பேசியதுடன் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பாக ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது உள்ளிட்டமை தொடர்பாகவும் அவர் குற்றம் சாட்டியது நவநீதம் பிள்ளையை எரிச்சலூட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: வீரகேசரி, பெப்ரவரி 26, 2012

__._,_.___
No comments:
Post a Comment