Translate

Tuesday, 28 February 2012

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை அடிப்படைவாதி: தயான் ஜயதிலக்க புகழாரம்


சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
'மனித உரிமைகள் தொடரிபில் பொறுப்புக்கூறல் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக, வலிமையான நம்பகரமான சுயாதீனமான முழுமையாக இயங்கும் தேசிய பொறிமுறையொன்றின் மூலமே, பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முடிவுக்கு கொண்டுவர முடியும்' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பழிவாங்கும் மனப்பாங்குடையவர் அல்லர் எனவும் அவர் ஒரு மனித உரிமை அடிப்படைவாதி எனவும் தயான் ஜயதிலக்க புகழ்ந்துள்ளார்
2007 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த கலாநிதி தயான் ஜயதிலக்க தற்போது பிரான்ஸுக்கான இலங்கையின் தூதுவராகவும் யுனெஸ்கோவுக்கான நிரந்திர பிரதிநிதியாகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment