Translate

Monday, 19 March 2012

கூடங்குளத்தில் பதட்டம் : கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு – 200 பேர் கைது கலவரம் வெடிக்கும் அபாயம்.


அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு உலையை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, கூடங்குளத்தில் காவல்துறையை முழு அளவில் இறக்கி, அணு உலைகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் இயற்றிய பின் காவல் துறையினர் ஆயிரக்கணக்கில்குவிக்கப்பட்டுள்ளனர் .

 அரசு இப்போது தெளிவாக உள்ளது . போராட்டத்தை வன்முறையால் அடக்கி அணு உலைகளை திறக்க வேண்டும் என தீர்மானித்து விட்டது. பல நூறு பேர்கள் கைது . சாலைகள் முடக்கம். உதயகுமார் சாகும் வரை உண்ணாவிரதம். இந்நிலையில் இடிந்தகரை மக்கள் தங்கள் கடைசி போருக்கு தயாராகிவிட்டனர் . 

சாரை சாரையாக கூடங்குளம் நோக்கி பயணிக்க தொடக்கி விட்டனர். கடல் வழியாகவும் மக்கள் வருகின்றனர் . மீண்டும் ஒரு பரமக்குடி படுகொலைகள் இங்கு நிகழலாம் என்றுகருதப் படுகிறது. போராட்டம் ஓயப்போவதில்லை என போராளிகள் உறுதியாக களத்தில் நிற்கின்றனர். 

No comments:

Post a Comment