ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித வுரிமை அமைப்பு கூடியிருக்கும் நிலையில் தமிழீழ மக்கள், பாலஸ்தீன மக்கள், குர்டிஸ்தான் மக்கள், சிரியா மக்கள், தென் சாராவி மக்கள் என்று விடுதலையை தேடி நிற்கும் மக்கள் அனைவரும் பிரான்சில் உள்ள 80க்கு மேற்பட்ட சங்கங்களுடன் சேர்ந்து காலனித்துவம் என்ற கூறி உலகத்தில் வாழும் பல மக்களின் உரிமைகளை பறித்து இன்று நாடுகள் அற்றவர்களாக,
சர்வதிகார ஆட்சியாளர்களின் அடக்கு முறையில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படவர்கள்அனைவரும் ஒரு கட்டமைப்புக்குள் இந்நாட்டு பல அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட Sortir deColonialisme (காலனித்துவ பிடிக்குள் இருந்து விடுதலை பெற)என்ற அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும் ஒருங்கிணைத்து பிரான்சு நாட்டு அரசுக்கும் சர்வதேசதிற்கும் நாடுகளின் இறையாமை என்கிறீர்கள் ஆனால் அந்த நாடுகளில் வாழும் மக்களின் இறையாமை – அவர்களின் சுய நிர்ணய உரிமைக்கு யார் பாதுகாவலர் என்று கேள்வியுடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
லிபியா மக்கள் கடாபியின் பிடிக்குள் இருந்து படுகொலை செய்யப்படும் போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே பிரான்சு விமானப்படை லிபியாவை தாக்கி ஒரு படுகொலையை தடுத்தது, அதே நேரத்தில் பாலஸ்தீனம் என்ற நாடு உருவாக வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்க இஸ்ரேல் பாலஸ்தீனம் நிலங்களில் தனது காலனித்துவத்தில் அந்த நாட்டை இல்லாமல் அழித்துக்கொண்டு இருக்கிறது, சர்வதேசமும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இன்று சிரியா நாட்டில் தமது ஜனநாயக உரிமைக்காக ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் – அரசு கொன்று குவிகிறது – சர்வதேசம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி கண்டனத்தோடு நிற்கிறது.
தமிழீழத்தில் ஒரு மாபெரும் படுகொலை நடக்கும் போது கூட பார்த்து கொண்டு இருந்த இந்த சர்வதேசம் இன்று சேனல் 4, மற்றும் பல மனித நேய அமைப்பின் சாட்சியங்கள் முன் பலரை திருப்தி படுத்த சிறி லங்கா என்ற குற்றம் இழைத்த நாட்டின் கற்று அறிந்த பாடங்கள்-நல்லேணக்க ஆணைகுழுவின் பரிந்துரையை நடைமுறை படுத்த வேண்டும் என்று ஜெனிவாவில் மனிதவுரிமை சமையில் கூறி நிற்கிறது. சிறி லங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் முதல் பரிந்துரை என்று நாம் எம்மை திருப்தி படுத்தினாலும்- பல உலக மக்கள் போல் நாமும் விடுதலை பெற்ற மக்களாக வாழும் உரிமை ஏன் எங்களுக்கும் இல்லை, ஏன் இந்த பாரபட்ச அரசியல் என்று நாம் சர்வதேச மக்களுடன் சேர்ந்து கேட்போம்.
ஆகவே தமிழீழ மக்களை இது எமக்கான விடுதலையின் பாதை – ஜெனிவா போராட்டத்தின் தொடர்ச்சி – நாம் போராடித்தான் ஆக வேண்டும்- இலையேல் சிறி லங்கா என்ற நாட்டிற்குள் இருந்து நாம் அழிக்கப்பட்டு விடுவோம்.
இது உலக மக்களின் போராட்டம் – உலகத்தாயின் பிள்ளைகள் நாங்கள் -
மார்ச் 17 நாம் எல்லோரும் பல்லாயிரக்கணக்காக உலக மக்களுடன் சேர்ந்து 64 வருடங்களாக தொடரும் இன அழிப்புகளை நிறுத்து என்று கேட்போம் வாருங்கள்.
இடம்: Barbes (Metro ligne 2 -4)
நேரம் : 14h00
தொடர்பு: mte.france@gmail.com
06 49 41 58 17
No comments:
Post a Comment