Translate

Monday, 19 March 2012

அரசாங்கத்தை கவிழ்க்க உதவவேண்டும்

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பருத்தித்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆட்சி நடத்தினால் வடக்கு கிழக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த நாடே பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகளாகியும் தீர்வு வழங்கப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமரிக்கா தனது பொம்மை ஆட்சியை நிறுவிக்கொள்ள மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரனில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏகாதிபத்திய அழிவு அரசுகளும் அதன் ஊடகச் சாதனங்களும் மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் பின்புலத்தில் மற்றொரு பேரினவாதப் பொம்மை அரசை நிறுவுவதே அடிப்படையாக உள்ளது என்பதை புலம்பெயர் புலி சார் அமைப்புக்கள் உணர மறுக்கின்றன. அவர்கள் தமது நலனுக்காக ஏற்படுத்திக்கொள்ளும் தீர்மானங்களை தமிழ்ப் பேசும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள பிழைப்புவாதிகள் மறுக்கின்றனர். உலக மக்களின் எதிரிகளான ஏகாதிபத்திய அரசுகளுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்ப் பேசும் மக்களின் உண்மையான நண்பர்களை எதிரிகளாக்கிக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment