Translate

Wednesday, 14 March 2012

கூகிள், ஜீமெயில் போன்றவற்றை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது

கூகிள், ஜீமெயில் போன்ற அமெரிக்க இணைய உற்பத்திகளை எவரேனும் பயன்படுத்தக் கூடாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் சகல இலங்கையர்களும் அமெரிக்கப் பொருட்களை நிராகரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய உற்பத்திகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சகல அமெரிக்க உற்பத்திகளையும் நிராகரிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் சகல அமெரிக்க உற்பத்திகளையும் இலங்கையர்கள் நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு நிராகரிப்பதன் மூலம் இலங்கையின் பலத்தை அமெரிக்கர்கள் புரிந்துகொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment