ஜெனீவா தொடர்பில் இலங்கை அரசு பொய் பிரசாரமே செய்து வருகின்றது; ஐ.தே.க குற்றச்சாட்டு |
ஜெனீவா இலங்கைக்கு எதிரான பிரேரணையினை நிறைவேற்றினால் அவற்றை மக்களுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே இலங்கை அரசு தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் தற்போது அரசு பொய் பிரசாரங்களையே செய்து வருகின்றது என ஐ.தே.க குற்றம் சாட்டியுள்ளது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தின் ஊடாகவே எமது நாட்டில் அமுல்படுத்த வேண்டும். என ஐ.தே.க செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசு முழு அளவில் நிறைவேற்றும் என ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஊடாக உறுதி வழங்கியுள்ளது. எனவே அரசியல் சுயநலனுக்காக ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தகவல்களை உண்மைக்கு புறம்பாக இலங்கை அரசு உள்நாட்டிலும் , மக்களுக்கும் பரப்பி வருகின்றது. ஆனால் அவ்வாறு பரப்பக்கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய பரிந்துரைகளை நாட்டிற்குள் அமுல்படுத்துவது என்பது தேசத்துரோகமான விடயமாகவோ மேற்குலக நாடுகளின் சதியாகவோ கருத முடியாது. ஏனெனில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை அரசாங்கமே ஸ்தாபித்தது. இக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்தின் அறிக்கையாகவே கருத முடியும். அரசாங்கத்தின் பரிந்துரைகளை உள்நாட்டில் அமுல்படுத்த வேறொரு நாடு பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளமை கவலையளிக்கின்றது, என்றாலும் அரசாங்கம் மீது முழு அளவில் நம்பிக்கைவைக்க முடியாது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தின் ஊடாகவே உள்நாட்டில் அமுல்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 14 March 2012
ஜெனீவா தொடர்பில் இலங்கை அரசு பொய் பிரசாரமே செய்து வருகின்றது; ஐ.தே.க குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment