Translate

Tuesday 3 April 2012

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்தமைக்காக இலங்கை பழி வாங்குகிறது


ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்தமைக்காக இலங்கை பழி வாங்குகிறது

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்தமைக்காக இலங்கை பழி வாங்குகிறது

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும்அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் இலங்கை திரும்பியுள்ளதாகவும்இலங்கை அரசபுலனாய்வுச் சேவையை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகம் வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டேஇந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேவேளைதமிழ்நாட்டு அரசியல்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் ஊடாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளை தமிழ்நாட்டு காவல்துறை ஆணையரும் இதனை மறுத்துள்ளார். 

ஆனாலும் இந்தியா மீது இலங்கை திட்டமிட்டே சுமத்தியுள்ள குற்றச்சாட்டாகவே,புதுடெல்லி இதனைக் கருதுகிறது. ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததன் எதிரொலியாக,இந்தியா மீது பழிபோடும் வகையில்  இலங்கைசெயற்படுவதாக அங்குள்ள இராஜதந்திரிகள் கூறியுள்ளனர். செய்தியில் அரச புலனாய்வுச் சேவை ஆதாரம் காட்டப்பட்டுள்ள நிலையில்,இதன் பின்னணியில் இலங்கை அரசே இருப்பதாக இந்தியா கருதுவதாகவும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக் கொள்ளாது என்றும்வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர்,இலங்கை - இந்தியா இடையிலான உறவுகளில் நெருடல் நிலை தோன்றியுள்ளது. 

அத்துடன்இலங்கைஇராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆறுநாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையிலேயே,  இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்தச் செய்தியை இலங்கை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
.

No comments:

Post a Comment